தனிமனிதருக்குரிய நுண்ணிய பண்புக் கூறுக ளைத் தவிர்ப்பதன் வாயிலாக உலகளாவும் தன் மையை எய்த முயன்றனர், கிரேக்கர். ஷேக்ஸ்பி யரோ, தம் படைப்புகளுடைய தனிப்பட்ட குணங்க ளின் அரிய நுணுக்கங்களையும் உலகந்தழுவியவை யாகச் சித்தரித்ததன் வாயிலாக, உலகளாவும் தன்மையை கிரேக்கரைவிட வெற்றிகரமாக எய்தி னார். வரம்பற்றோனை நம்மிடமிருந்து மறைப்பதற் கென, தனிப்பட்ட குணங்களை இயற்கை பயன் படுத்துகிறாள்; அவற்றையே பயன்படுத்தி, மனித னுள் இருக்கும் அளவிலா குணமாகிய அனந்த குணத்தை மனிதகுலத்திற்குக் காண்பித்துள்ளார். ஷேக்ஸ்பியர்.