ஓ வருண்னே. என்னுள் விரிந்து பரந்திரு: என்னுள் பேராற்றலாயிரு, ஓ இந்திரனே; ஓ திர வனே, சுடர்விட்டொளிர்; ஓ சந்திரனே, வசீகரமும் இனிமையும் நிறைந்திரு. கடுஞ்சிற்றத்தொடு பயங் கரமாயிரு, ஒ உருத்திரனே; கட்டுக்கடங்கா விரைவு டன் பாய்வீர், ஒ மாருதரே; வலியோனாயும் தீரனா யுமிரு. ஒ அரியமனே; இன்பங் கொண்டிரு, உவகை யளி, ஒ பாகனே; கனிவும் அன்பும், கருணையும் உணர்ச்சியும் மிக்கிரு, ஒ மித்திரனே. பிரகசித்துக் காட்சியளி, ஒ வைகறையே ; ஒ இரவே, ஆழ்ந்து உட்செறிவு கொண்டிரு. ஒ வாழ்வே, நிறைவுற்று மேலெழுந்து ஆயத்தமாயிரு. ஓ யமனே. மாளிகை விட்டு மாளிகை செல்கையில் என்னை வழிநடத்து. இவையனைத்தையும் இசைவுறச் செய், ஒ பிரம்ம னஸ்பதியே. இத்தெய்வங்களுக்கு நான் அடிமை யாகாதிருக்க அருள், ஒ காளி.
– ஸ்ரீ அரவிந்தர்